டெல்லியில் உள்ள மன்டோலி ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் மருத்துவர் ஒருவர் இருக்கிறார். இந்த பெண் மருத்துவர் நேற்று முன்தினம் வழக்கம்போல கைதிகளின் உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர், திடீரென பெண் மருத்துவரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். உடனே அந்த பெண் மருத்துவர் சத்தம் போட்டு அலறியதால் அங்கிருந்த சிறை காவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதியை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஜெயிலுக்குள் பெண் மருத்துவரை கைதி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.