fbpx

கோமாளிகளை பிச்சைக்கார நாயே, முட்டாள் நாயே என வசைபாடி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி ஷாலின் சோயா..!!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில், தன்னுடைய கோமாளி வயதில் மூத்தவர் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் அவரை பிச்சைக்கார நாயே, பொருக்கி என வசைபாடி சர்ச்சையில் சிக்கி உள்ளார் TTF வாசனின் காதலி ஷாலின் சோயா.

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இதுவரை 4 சீசன் நிறைவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆரம்பமானது. இம்முறை நடுவராக செஃப் தாமுவுடன் சேர்ந்து, பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு மெய் சிலிர்க்கும் வகையில் சமையல் விருந்து கொடுத்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். அதே போல் இம்முறை ரக்‌ஷனுடன் சேர்ந்து, கடந்த 4 சீசன்களில் கோமாளியாக கலக்கிய மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்.

போட்டியாளராக ஸ்ரீகாந்த் தேவா, அக்ஷய் கமல், வசந்த் வஷி, பிரியங்கா தேஷ்பாண்டே, சாலின் சோயா, சூப்பர் சிங்கர் பூஜா, சுஜிதா, உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். கடந்த 4 சீசனை ஒப்பிட்டால் இந்த சீசனில் கோமாளிகள் கொஞ்சம் சொதப்புவது போல் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே போல் குக் வித் கோமாளியில் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, எல்லை மீறி கோமாளிகள் போட்டியாளர்களை தொட்டு பேசுவதாக சமீபத்தில் பொங்கி இருந்தார் TTF வாசன். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், தன்னுடைய காதலி என ஷாலின் சோயாவை குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனுபவங்களை ஷாலின் பகிர்ந்துள்ளார். அதன்படி, தனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமே டிடிஎப் தான் என கூறி இருந்த ஷாலின் சோயா, குக் வித் கோமாளி போனதும் அந்நிகழ்ச்சியை நீ பார்க்காத என டிடிஎப் வாசனிடம் சொல்லிவிட்டாராம். ஏனெனில் அந்நிகழ்ச்சியில் குரேஷி, புகழ் ஆகியோர் ஷாலினின் கன்னத்தை கிள்ளி கிள்ளி பேசுவதை பார்த்து டிடிஎப் கடுப்பாகிவிடுவாராம். அதனால் அவரிடம் இந்நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என சொல்லியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக தற்போது ஷாலின் சோயா புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கடந்த வார நிகழ்ச்சியில் ஷாலின் சோயாவுக்கு கோமாளியாக தங்கதுரை வந்திருந்தார். அப்போது அவரை வேலை வாங்க கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல், மலையாலயத்தில் ‘பிச்சைக்கார நாயே இங்க வாடா, முட்டாள் நாயே, பொருக்கி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியிருந்தார். இதை தொடர்ந்து TTF வாசனில் காதலியை சமூக வலைத்தளத்தில் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உங்களுக்கு ஒருவரிடம் எப்படி பேச வேண்டும் என்கிற அடிப்படை கூட தெரியாதா என்றும், அவரின் வயதுக்காவது மரியாதை கொடுங்கள் என கூறி வருகின்றனர்.

Read More : BREAKING | கஞ்சா வழக்கு..!! யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை..!!

Chella

Next Post

"அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்" - மத்திய அரசுக்கு மருத்துவர்கள் குழு கோரிக்கை!

Fri May 10 , 2024
அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசை மருத்துவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. பிரிட்டனின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா, தங்களது கொரோனா தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியை, இந்தியாவில் `கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்தது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் இந்த […]

You May Like