பிளஸ்1 மாணவனுக்கு மது ஊற்றி கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் டீச்சரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் பிளஸ்1 மாணவன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நன்றாக படித்துக் கொண்டிருந்த மாணவனின் படிப்பில் மதிப்பெண்கள் குறைய துவங்கியது. மாணவனின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மாணவனை அழைத்து இதுகுறித்து பெற்றோர்களும் விசாரித்தனர். மாணவன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. தன்னை டியூஷன் ஆசிரியை பலமுறை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவன் கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 34 வயதான டியூஷன் ஆசிரியை தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா காலத்தில் மாணவனுக்கு மது கொடுத்து, அவருடன் பலமுறை செக்ஸ் வைத்திருக்கிறார் ஆசிரியை. இதையடுத்து, மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.