துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் சிக்கிய 17 வயது சிறுவன் கிட்டத்தட்ட 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. மேலும் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதனா ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் 24,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களாகியும் இடிபாடிகளுக்குள சிக்கிய இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்..
அந்த வகையில் கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு பிறகு 17 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.. துருக்கியின் காஸியான்டெப் நகரில் வசித்து வந்த அட்னான் முஹம்மத் கோர்குட் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர் தனது குடும்பத்தின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.. இதனால் குறைந்தது 94 மணிநேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு பிறகு அவர் மீட்கப்பட்டுள்ளார்.. மீட்பு பணி நடந்த போது, மீட்பு படையினரின் குரல்கள் தனக்கு கேட்டதாகவும், ஆனால் தனது குரலை அவர்களால் கேட்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.. 4 நாட்களாக தனது சிறுநீரைக் குடித்துவிட்டு, வீட்டில் இருந்த பூக்களை உண்டு உயிர் வாழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளர்.. ஆனால் 4 நாட்களுக்குப் பிறகு, அவர் இறுதியாக மீட்கப்பட்டார்..