blacksheep யூடியூப் சேனலின் பிராங்க் வீடியோ மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், அமலாபால் நடித்த ஆடை மற்றும் ஜெயம் ரவி நடித்த கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து கலக்கினார் பிஜிலி ரமேஷ். குடித்துவிட்டு சாலையில் சென்ற பிஜிலி ரமேஷ், பிராங்க் செய்கிறோம் என பிடித்து கலாய்க்க தமிழ் சினிமாவுக்கு திடீரென ஒரு நடிகரே கிடைத்துவிட்டார். ஆனால், அதே குடி தற்போது அவரது வாழ்க்கையை மாற்றிப் போட்டு பரிதாபமான நிலைக்கு தள்ளி இருக்கிறது.
ஒரு இடத்தில் நிற்க மாட்டேன், சும்மா சுத்திக்கிட்டே இருப்பேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நான் செய்த தவறுகள் அதிகம். அதிக குடியால், தற்போது உடல் நலம் முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்னைப் பார்த்தாவது அந்த மோசமான குடிப்பழக்கத்தை மற்றவர்கள் விட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நான் நல்லா இருந்த போது சினிமாவில் நடித்த போது என்னை சுற்றி தினமும் 40 நண்பர்கள் கூட இருந்தனர். ஆனால், இன்றைக்கு உடல் நலம் முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போது ஒருவன் கூட எட்டிப் பார்க்கவில்லை.
உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதைத் தேவையில்லாத தீய பழக்கங்களுக்கு அடிமையாகி கெடுத்துக் கொள்ளாதீர்கள் என பிஜிலி ரமேஷ் தன்னுடைய சோகமான நிலையிலும் அடுத்தவர்கள் யாரும் தன்னைப் போல பாதிக்கக் கூடாது என்பதற்காக அறிவுரை வழங்கியுள்ளார். ‘தினந்தோறும்’ படத்தின் இயக்குநர் நாகராஜ் கூட குடிப் பழக்கத்தான் தனது வாழ்க்கை எப்படி எல்லாம் சீரழிந்து போனது என்பதை விளக்கினார். ஆனாலும், சுடும் வரை தீயின் வலி தெரியாது என்பது போல கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பின்னரும், டாஸ்மாக் கடைகளிலும் திருட்டுத்தனமாகவும் குடித்து கெட வேண்டும் என பலர் வீட்டில் பூச்சிகளாக விழுந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
Read More : புதிதாக இந்த தொழில் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!