fbpx

சீயான் விக்ரம்-க்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்!!

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ராயன், வேட்டையன் ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். தற்போது விக்ரமின் 62 வது படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Next Post

"மக்களுக்கான மரியாதைய தரணும்..! போய வாயானு பேசக்கூடாது" கதிர் ஆனந்த் பிரச்சாரத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்..!

Thu Apr 4 , 2024
18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சியின் வேட்பாளர்கள் தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் […]

You May Like