தூத்துக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் எல்லம்மாள். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 7ம் தேதி செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தான் பணியாற்றி வந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கே வந்த கார் ஒன்று பெண்ணை கடத்திச் சென்றது.
இதை நேரில் பார்த்தவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்ததால் அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள்தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் முறையான பதில் தரவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். எனவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லம்மாள் பணியாற்றிய நிறுவனத்தில் சோலையப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்ததாகவும் இதனால் பெண்ணை கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளனர்.