fbpx

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்… தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு..!! அடுத்த மூவ் என்ன?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்தன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கான கூட்டணி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவித்து விஜய் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 7 தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புஸ்லி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இந்தியத் தேர்தல் ஆணையம், 01.01.2025 என்பதைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது. இம்மாதத்தில் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. புதிதாகப் பெயர் சேர்க்க, சில ஆவணங்களைச் சான்றாக இணைக்க வேண்டும். மேலும் அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் நிரப்பி, முகாம்களில் உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி நம் கழகம் சார்பாக, தங்கள் மாவட்டத் தொகுதிகளில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேற்குறிப்பிட்ட இரண்டு வாரங்களிலும் (நான்கு முகாம் நாட்களில்) மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மேற்பார்வையில், ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஏழு (7) தற்காலிகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை ஈடுபடுத்திக்கொண்டு இம்முகாம் தொடர்பாக ஆட்டோ பிரச்சாரம் செய்வதுடன் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து இப்பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.” என கூறியுள்ளார்.

Read more ; ‘I LOVE WAYANAD’ ஒரே டி-சர்ட்டில் மொத்த வயநாட்டு மக்களையும் கவர்ந்த ராகுல் காந்தி..!!

English Summary

TVK chief instructs volunteers to campaign in autos for voter registration camp

Next Post

சிறுவனின் ஜாமென்ட்ரி பாக்சில் இருந்த 50 ரூபாய் திருட்டு; நடிகையின் வீட்டில் திருடன் செய்த அட்ராசிட்டி!!

Mon Nov 11 , 2024
theft-in-actress-home

You May Like