fbpx

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது தவெக மாநாடு..!!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்தே இன்று அதிகாலை முதலே விக்கிரவாண்டிக்கு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் காலை 11 மணியளவிலேயே மாநாட்டுத் திடலில் இருந்த பார்க்கிங் வசதி நிரம்பியது. இருப்பினும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர். மாநாட்டுத் திடலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தொண்டர்கள் நடந்து வருகின்றனர்.

வி.சாலை பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலையிலேயே உணவு தீர்ந்துவிட்டதால், அப்பகுதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு மாலை 6 மணிக்கு மாநாடு தொடங்கவிருந்த நிலையில் மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்கியது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். த.வெ.க. தலைவர் விஜய்யை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதனைத்தொடர்ந்து 100 அடி உயர கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டது. ஆரவாரமுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தவெக தலைவர்கள் விஜய் உட்பட அனைத்து தொண்டர்களும் எழுந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இந்த மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து இளம் பெண் பாடகர்களால் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more ; ரசிகர் கூட்டம் நடுவில் விஜய் ராம்ப் வாக்.. கழுத்து நிறைய தவெக துண்டு..!! தொண்டர்கள் உற்சாகம்

English Summary

tvk conference started with tamil thai wishes.

Next Post

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பில் கொள்கை பாடல் வெளியீடு..!!

Sun Oct 27 , 2024
While the flag song of the Tamil Nadu Vetri Kazhagam was released, the principle song was released starting with “Vetri…Vetri…”

You May Like