fbpx

TVK Vijay | அடங்கேப்பா..!! இதுவரை விஜய் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா..?

நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இக்கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மதுரை அழகர்கோவில்ரோடு சூர்யாநகர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை பனையூர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மார்ச் 8ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலமே உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் இணைந்தார்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கை அதிதீவிரமடைந்தது. ‘அனைவரும் கட்சியில் உறுப்பினராக சேரலாம். வாட்ஸ் அப், டெலிகிராம், அலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் இணையலாம். தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்’ என தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, ஒரே நாளில் 20 லட்சம் பேர் பதிவு செய்து கட்சியில் சேர்ந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று வரை மொத்தம் 50 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 390+ பேருக்கு அரசுப்பணி!… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Chella

Next Post

மருத்துவ அறிவியல் மேதை Alexander Fleming நினைவு தினம் இன்று!… உலகின் முதல் ஆன்டி பயாடிக் மருந்தை கண்டறிந்தவர்!

Mon Mar 11 , 2024
Alexander Fleming: உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருந்தை கண்டறிந்த மருத்துவ அறிவியல் மேதை, நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு தினம் இன்று. இவரது கண்டுபிடிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டி பயாடிக் மருந்துகள் இந்த உலகில் இல்லை. இந்த உலகில் கண்டறியப்பட்ட முதல் ஆண்டிபயாடிக் மருந்து பென்சிலின்தான். இதை கண்டறிந்தவர் அலெக்சாண்டர் பிளெமிங். உலகப்புகழ் பெற்ற […]

You May Like