fbpx

TVK Vijay | பரப்புரை, பொதுக்கூட்டம்..!! தனது கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்..!!

மாற்றுக் கட்சியினருடைய பரப்புரை, கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தார் விஜய். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் அவர் கூறினார். இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய். தனது கட்சி சார்பாக விரைவில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் மூலம் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை விஜய் பிறப்பித்துள்ளார். அதில், “விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறார்கள். அதற்கான பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம் போன்றவையும் சூடிபிடிக்கும். அதனால், நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சியினரது பரப்புரை, பொதுக்கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது.

உறுப்பினர்கள் சேர்க்கையில் முழு கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 2026 நமது இலக்கு” எனக் கூறியுள்ளார். தேர்தல் சமயத்தில் விஜய் உத்தரவை நிர்வாகிகளும், கழகத்தை சேர்ந்தவர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : ’நீங்க கேக்குற தொகுதிய நாங்க தர்றோம்’..!! மதிமுகவுக்கு தூதுவிட்ட ADMK..!! எடப்பாடி போட்ட பிளான்..!!

Chella

Next Post

Sathyaraj | ”வடமாநிலத்தில் தான் மதப்புயல், தமிழ்நாட்டில் அது மடப்புயல்”..!! நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு..!!

Tue Mar 5 , 2024
திமுக சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் முக.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ”வட மாநிலத்தில் இருந்து மதப்புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்ராதீங்க என்று கூறுகிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வடமாநிலத்தில் தான் மதப்புயல்.. தமிழ்நாட்டில் அது மடப்புயல். ஏனெனில், இங்கு எல்லா மதங்களை சேர்ந்தவரும் அண்னன் தம்பி போல் பழகிக்கொண்டிருக்கிறோம். இங்கு மதத்தை […]

You May Like