தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
Read more ; 400 பில்லியன் டாலரை கடந்த சொத்து மதிப்பு.. புதிய உச்சம் தொட்ட எலான் மஸ்க்..!!