தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. அதன் படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் உள்ளது. ஆனால் வாசல் ஒரே வாசல் தான். மேலும் ஒரே கிட்சன் தான். மேலும் இந்த முறை confession ரூம் ஏஞ்சல் இறக்கை இருக்கும் நாற்காலியுடன் இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார் கூல் சுரேஷ். அவருக்கு சுரேஷ் என்று வார்த்தை பொறிக்கப்பட்ட சங்கிலியை கொடுத்துள்ளார் கமல். அதனைத்தொடர்ந்து உள்ளே சென்ற கூல் சுரேஷிடம் கேப்டன் பதவியை கொடுத்து இரண்டாவது உள்ளே வருவருடன் விவாதித்து தலைவர் பதவியை நிரூபித்து கேப்டன் பொறுப்பை தக்கவைக்கும்படி கூறினார்.
இந்நிலையில் இரண்டாவது போட்டியாளராக பிரபல யூடியூபர் பூர்ணிமா ரவி விசிலுடன் உள்ளே சென்றார். தொடக்கத்திலையே ரொம்ப ஓவராக பேசும் பூர்ணிமா ரவியுடன் கேப்டன் பதவிக்கான விதிமுறையை சொல்லி நானே கேப்டன் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று கூல் சுரேஷ் கூற, விட்டுக்கொடுக்காமல் விவாதத்தை தொடங்கினார் பூர்ணிமா ரவி. அதன் பிறகு கேப்டன் பதவியை விட்டு கொடுத்தார் கூல் சுரேஷ். கேப்டன் ஆகிவிட்டோம் என்ற சந்தோசத்தில் இருந்த பூர்ணிமாவுக்கு, தொடர்ந்து வருவோரிடம் இதையே செய்து கேப்டன் பொறுப்பை தக்க வைக்க வேண்டும் என்று கூறினார் பிக்பாஸ்.