fbpx

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றவில்லை! ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால், நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித், ட்வீட் மற்றும் கணக்குகள் இரண்டையும் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று கூறி, ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், மத்திய அரசின் உத்தரவை கடைபிடிக்காததற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும், இந்த தொகையை 45 நாட்களில் கர்நாடக சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும். பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 5,000 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதி கிருஷ்ணா உத்தரவிட்டார். இதற்கிடையில், விவசாயிகள் போராட்டத்தின் போது அரசை விமர்சிப்பவர்களின் தொடர்பான ட்விட்டர் கணக்கை முடக்க இந்திய அரசு தங்கள் இந்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சொன்னதை செய்யாவிட்டால் அலுவலகத்தை மூட நேரிடும் எனவும் கூறியதாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தமிழகத்தில் இன்றுமுதல் கனமழை வெளுத்து வாங்கும்!... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?... வானிலை மையம் அறிவிப்பு!

Sat Jul 1 , 2023
தமிழகத்தில் இன்றுமுதல் வரும் 3ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மட்டும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. தற்போது தமிழகத்தில் அ மதுரை விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40.4 டிகிரி செல்சியஸ் ஆக […]

You May Like