fbpx

‘கேம் சேஞ்ஜர்’ திரைப்பட விழாவில் ரசிகர்கள் இருவர் மரணம்..!! ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய ராம் சரண்..!! எப்போது உறுதுணையாக இருப்போம்..!!

சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேம் சேஞ்ஜர். இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் வரும் 10ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ராஜமஹேந்திரவரம் நகரில் ராம் சரணின் கேம் சேஞ்ஜர் படத்திற்கான ப்ரோமோஷன் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது ஆரவ மணிகண்டா (23) மற்றும் தோக்கடா சரண் (22) ஆகிய இரு ரசிகர்களும் விபத்தில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை வெளிப்படுத்தும் விதமாக தனது குழுவை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ராம் சரண் கூறுகையில், ”நாங்கள் எப்பொழுதும் விழாக்களைக் காணவரும் ரசிகர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக்கொள்வோம். விபத்தில் ரசிகர்கள் உயிரிழந்தது இது மிகவும் துரதிஷ்டமான நிகழ்வு. இந்த துயரத்தை தாங்கும் குடும்பங்களின் வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து கேம் சேஞ்ஜர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறுகையில், “நடந்த சம்பவம் குறித்து தெரிந்துகொண்டேன். அவர்களது ஆன்மா அமைதியில் இளைப்பாற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். 2 குடும்பங்களுக்கும் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். நான் உடனடியாக 2 குடும்பத்துக்கு தலா 5 லட்சம் வழங்குகிறேன். நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.

Read More : பொங்கல் பண்டிகை..!! உங்கள் ஊருக்கு செல்ல எங்கு பஸ் ஏற வேண்டும்..? மொத்தம் 22,676 பேருந்துகள்..!! மாஸ் காட்டிய போக்குவரத்துத்துறை..!!

English Summary

We always pray that the fans who come to watch the festivities return home safely.

Chella

Next Post

உலகை அச்சுறுத்தும் HMPV வைரஸ்!. பரவுவதைத் தடுக்க செய்ய வேண்டியவை!. செய்யக்கூடாதவை!.

Tue Jan 7 , 2025
HMPV virus that threatens the world! What to do to prevent the spread!. Don'ts!

You May Like