உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் கையில் துப்பாக்கியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வீடியோவில் இருந்த இரண்டு இளைஞர்களையும் தேடிவந்தனர். அவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து இருவரையும் கைது செய்தது காவல்துறை. கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் வைத்திருந்தது விளையாட்டுத் துப்பாக்கி என தெரிய வந்தது இதனால் காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அவர்களுக்கு அபராதம் செலுத்தி விடுவித்தனர்.
கடந்த வாரம் இதே போன்ற ஒரு சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள ஹஜரத்கஞ்சி என்ற பகுதியில் நடைபெற்றது. சிறுமி ஒருவர் மோட்டார் வாகனத்தை ஒட்டி சென்ற ஒருவரை இறுக்கமாக கட்டியணைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் இருந்த அவர்களை கைது செய்த காவல்துறை அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்தது. மேலும் மோட்டார் விதிகளை மீறியதற்காக அவர்களின் மீது வழக்கு பதிந்தது . இந்நிலையில் பொது இடங்களில் ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டதாக அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
பொதுமக்கள் பொறுப்பின்றி இது போன்ற நடவடிக்கைகளில் கேளிக்கைகளுக்காக ஈடுபட வேண்டாம் என காவல்துறையின் திறப்பிலிருந்து மக்களை அறிவுறுத்தி வருகின்றனர் . இது போன்ற விளையாட்டுக்கள் பொதுமக்களின் அன்றாடப் பணிகளை பாதிக்கும் எனவும் இது சமூகத்திற்கு ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல எனவும் காவல்துறை இளைஞர்களை எச்சரித்து வருகிறது . தற்போது சமூக வலைதளங்களின் மோகம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது . இதன் காரணமாக அவர்கள் ஏதேனும் சாகசங்களையோ அல்லது கேளிக்கைகளையும் செய்து அதை காணொளிகளாக எடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் சில நேரங்களில் வினையாக முடிந்து விடும் வினை எச்சரித்து இருக்கிறது காவல்துறை.