fbpx

மின்சாரம் தாக்கி பலியான பம்ப் ஆபரேட்டர்கள்.. பல மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரல!! – வேலூரில் சோகம்

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் அமைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பஞ்., உட்பட்ட ரங்கப்பன் கொட்டாய் பகுதியில், பஞ்சாயத்து சார்பில் மின் விளக்கு அமைக்க இரும்பால் ஆன மின்கம்பம் நடும் பணி நடந்தது. வேப்பங்குப்பம் பம்ப் ஆப்பரேட்டர் முத்துக்குமரன், 45, மற்றும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி அசோக்குமார், 55, ஆகியோர், நேற்று மதியம், 2:00 மணிக்கு அப்பணியில் ஈடுபட்டனர்.

இரும்பு மின் கம்பத்தை துாக்கி நிறுத்தும்போது, மின் கம்பம் தடுமாறி பக்கத்தில் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதில், மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தகவல் அறிந்து வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும் சடலத்தை எடுத்து எல்ல ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

Read more ; சீனாவை அதிரவைத்த விஜய் சேதுபதியின் மஹாராஜா.. பாகுபலி 2 ரெக்கார்டை உடைத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்!!

English Summary

Two panchayat pump operators died in an unexpected electric shock while erecting a street lamp near Vellore.

Next Post

பிரபாகரனை சந்தித்ததே 10 நிமிடம்தான்..!! அப்படினா ஆமைக்கறி, ஏகே 64 எல்லாம் பொய்யா..? சீமானின் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட காளியம்மாள்..!!

Thu Nov 28 , 2024
"Is everything Seeman has told us all these days a lie? Seeman, you've finished us off, go away," we Tamil brothers are complaining.

You May Like