fbpx

கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளி!. பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!. 800க்கும் மேற்பட்டோர் காயம்!. மொசாம்பிக்கில் பயங்கரம்!

Cyclone Chido: மொசாம்பிக்கில் கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் பலியாகி உள்ளனர். 868 பேர் காயமடைந்து உள்ளனர்.

மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதுவரை சூறாவளி பாதிப்புக்கு120 பேர் பலியாகி உள்ளனர். 868 பேர் காயமடைந்து உள்ளனர். சூறாவளியால், 6.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள மெகுபி மாவட்டத்தில் சூறாவளி கரையை கடந்தது. தொடர்ந்து, திங்கட்கிழமையும் சூறாவளி தாக்கம் இருந்தது. கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. சூறாவளியால் இதுவரை 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் சேதமடைந்து உள்ளன.

Readmore: புரோ கபடி!. இன்றுடன் முடிவடையும் ப்ளே ஆப் சுற்றுகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு!. கடைசிவரை பரபரப்பு!

Kokila

Next Post

கவனம்... இந்த பொருள்களை அரைத்தால், மிக்ஸி சீக்கிரம் பழுதாகிவிடும்!!!

Tue Dec 24 , 2024
dont grind these products in mixie

You May Like