fbpx

74 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் யு.யு.லலித்..!

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். அவரை சிறப்பிக்கும் விதமாக உச்சநீதிமன்ற வழக்காடல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில், மூத்த நீதிபதியான உதய் உமேஷ் லலித், புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கான விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

74 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் யு.யு.லலித்..!

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியான லலித் 74 நாட்கள் மட்டுமே பணியாற்றி, வரும் நவம்பர் 8ஆம் தேதி ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் லாபம் ஈட்டலாம்.. எல்.ஐ.சியின் அசத்தல் திட்டம்..

Sat Aug 27 , 2022
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பல திட்டங்களை வழங்குகிறது. நீங்களும் எல்ஐசியில் முதலீடு செய்ய விரும்பினால், எல்ஐசி ரெகுலர் பிரீமியம் யூனிட் லிங்க்டு பிளான், எஸ்ஐஐபியில் (SIIP) பணத்தைப் போட்டு பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் 21 ஆண்டுகளுக்கு தோராயமாக 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, இந்த திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு நீங்கள் 45 லட்சம் ரூபாயைப் பெறலாம். சுமார் 35 லட்சம் லாபம் கிடைக்கும்.. SIIP என்பது […]

You May Like