fbpx

கார், ஆட்டோவை தொடர்ந்து பேருந்து சேவையில் களமிறங்கும் ஊபர்..!! 50,000 பேருக்கு வேலைவாய்ப்பும் உண்டு..!!

கார் மற்றும் ஆட்டோ சேவையில் ஈடுபட்டு வரும் ஊபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் செல்பவர்களைக் கவரும் வகையில், வணிக மாவட்டங்களில் பேருந்து சேவையை தொடங்க ஊபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டது ஊபர் நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவிலும் வாடகை வாகன சேவையை வழங்கி வருகிறது.

அதன்படி ஆட்டோ மற்றும் கார்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வந்த ஊபர், தற்போது பேருந்து சேவையையும் வழங்க முடிவு செய்துள்ளது. மென்பொருள் நிறுவனம், தொழிற்சாலை மற்றும் அலுவலகம் செல்வோரை கவரும் வகையில், குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 60 குளிர்சாதன பேருந்துகள் மூலம் சோதனை முயற்சி செய்யவுள்ளது.

வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் அவர்களில் அலுவலகம் இடையே பேருந்து சேவை வழங்கப்படவுள்ளது. இதற்காக 2025ஆம் ஆண்டில் ஒரு கோடி டாலர்களை ஊபர் நிறுவனம் கொல்கத்தாவில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் எனக் கூறப்படுகிறது. பேருந்து சேவைகளுக்காக மாநில போக்குவரத்துத் துறையுடன் ஊபர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Chella

Next Post

6 - 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு..!! நவ.28ஆம் தேதி முதல் ஆரம்பம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Thu Nov 23 , 2023
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் திறன்வழி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மதிப்பீட்டு தேர்வுகள் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான […]

You May Like