fbpx

அமித்ஷாவின் பேச்சுக்கு…..! பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்…..!

நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை முதல்வராக்க உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் தான் திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்றுக் கொண்டு உரையாற்றினார். திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, துணை பொது செயலாளர் ஆ ராசா மற்றும் நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டனர்.

அதன் பிறகு இந்த விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி இருக்கிறார்.

அதாவது நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த பதவிக்கு வந்திருக்கிறேன். அமித் ஷாவின் மகன். ஜெய்ஷா எப்படி இந்த நிலைக்கு வந்தார்? ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளாரே அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்?

எத்தனை ரன்கள் அடித்துள்ளார்? 2014 ஆம் வருடம் பாஜக ஆட்சிக்கு வரும்போது அனுஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திய நிறுவனத்தின் மதிப்பு 75 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 130 கோடி ஆனது எப்படி? மகனைப் பற்றி பேச முடியாமல் அமித்ஷா என்னை பற்றி பேசி இருக்கிறார் என்று உதயநிதி தெரிவித்து இருக்கிறார்.

Next Post

கிருஷ்ணகிரி-யில் வெடித்து சிதறிய பட்டாசு குடோன்.. தீ விபத்தில் 9 பேர் பலி..!

Sat Jul 29 , 2023
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து காரணமாக […]
செலவுக்கு பணம் தராததால் பாட்டியை தீவைத்து கொன்ற பேரன்..!! பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு..!!

You May Like