fbpx

மாணவி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை..!! அமைச்சர் பயந்து ஓடுகிறார்..!! அண்ணாமலை தாக்கு..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் இதுவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்..? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படாமலேயே உள்ளது. ஒரு முக்கிய அமைப்பே செயல்படாமல் இருப்பது முதல்வருக்கு தெரியவில்லையா..?

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகமாக காட்டப்படக் கூடாது என்பதற்காக காவல்துறை எஃப்ஐஆர்-ஐ பதிவிடாமல் மறைத்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்தித்து இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்தவர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் காலை மேற்கொள்ளும் ஓட்டப்பந்தய பயிற்சி போல் செய்தியாளர்களை பார்த்து பயந்து ஓடி வருகிறார். பஞ்சப்பாட்டு பாடுவது திமுகவின் கொள்கையாகவே உள்ளது.

ரூ.44,662 கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ள நிலையில், இவர்கள் பள்ளிகளை மேம்படுத்துவதே கிடையாது. அனைத்து அரசுப் பள்ளிகளும் தற்போது சீரழிந்து வருகிறது. பொங்கல் பரிசுத் தொகை என்பது ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் வழக்கம். கடந்தாண்டு இதை கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால், அனைவரும் சண்டை போட்ட பின் தருவதாக கூறினார்கள்” என்று பேசியுள்ளார்.

Read More : இனி சோசியல் மீடியாவில் கணக்கு துவங்க பெற்றோரின் அனுமதி தேவை..!! மத்திய அரசு அதிரடி..!!

English Summary

Tamil Nadu BJP leader Annamalai has questioned why Deputy Chief Minister Udhayanidhi Stalin has not met the media so far regarding the Anna University student issue.

Chella

Next Post

கங்கை, காவிரி இல்ல.. இந்தியாவின் தூய்மையான நதி இது தான்.. எங்குள்ளது தெரியுமா..?

Sat Jan 4 , 2025
Do you know which is the cleanest river in India? Let's find out in this post.

You May Like