fbpx

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், இந்த படம்தான் தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

‘ஏஞ்சல்’ படத்துக்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.’ஏஞ்சல்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார்.

எனவே, ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் வரும் ஜூன் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Maha

Next Post

எனக்கும் ஷர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!! அவர் விரும்பினால் பணியில் தொடரலாம்..!! உரிமையாளர் தகவல்

Fri Jun 23 , 2023
எனக்கும் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தைஇயக்கி முதல் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெயரை பெற்றவர். அண்மையில்பிரபலமான சர்மிளாவைப் பலரும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். சர்மிளாவுக்குகோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் காந்திபுரத்திலிருந்து சோமனூர்செல்லும் வழித்தடத்தில் பேருந்து இயக்க பணி வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று அவர் […]
எனக்கும் ஷர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!! அவர் விரும்பினால் பணியில் தொடரலாம்..!! உரிமையாளர் தகவல்

You May Like