fbpx

இனி இந்த அடையாள அட்டை கன்பார்ம் இருக்க வேண்டும்…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்

மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ) UDID – Unique Disability ID) E-சேவை மையங்கள் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் (UDID Unique Disability ID) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவேற்றம் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இனி வருங்காலங்களில் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு UDID அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது.

எனவே தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை UDID அட்டை பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள E சேவை மையங்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (மருத்துவச்சான்று உட்பட), ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் மாற்றுத்தறனாளி நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம், www.swavlambancard.gov.in என்ற இணைய தளத்தில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04342-230050 மற்றும் 9443771045 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் மாற்றுத்திறனாகளின் முக்கிய ஆவணமான UDID அட்டை பெற தாமதமின்றி மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு முறையில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மக்களே...! தமிழகத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை...! எந்தெந்த மாவட்டத்தில்...?

Sat Dec 16 , 2023
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது . இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், […]

You May Like