யு.ஜி.சி. நெட் தேர்வு எனப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
யு.ஜி.சி. நெட் தேர்வுகள் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
கொரோனா தொற்று காரணமாக நடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள், இணைத்து ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி நாடு முழுவதும் நெட் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது.
முதல் கட்டத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 8 முதல் 12 தேதி வரையும் இரண்டாம் கட்டத்தேர்வு செப். 20 முதல் 23 ஆம் தேதி வரையும் நடைபெற்றது. பின்னர் மூன்று மற்றும் நான்காம் கட்ட தேர்வுகள் செப்.29 முதல் அக். 4 ஆம் தேதி வரையிலும் அக். 8 முதல் 14 ஆம் தேதி வரையிலும் நடந்தது.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தற்காலிக விடைக்குறிப்பு வெளியானது. மேலும் தேர்வர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. பின்னர் நவம்பர் 2 ஆம் தேதி இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது.
யுஜிசி நெட் தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித்தேர்வாகும்.தேசிய அளவில் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இத்தேர்வில் தேச்சி அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.