fbpx

’நோ பால்’ கொடுத்த நடுவர்..!! கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற கொடூரம்..!! பெரும் பரபரப்பு..!!

ஒடிசா மாநிலம் சௌத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ளூர் நபர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் போட்டி ஒன்றை விளையாடியுள்ளனர். ஜாலியாக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரவுட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக இருந்துள்ளார். போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் ‘நோ பால்’ வீசியதாக சைகை காட்டினார். ஆனால், அது நோ பால் இல்லை என பந்துவீச்சாளரும் பீல்டிங்கில் இருந்த அணியின் வீரர்களும் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.

பீல்டிங் அணியில் இருந்த வீரர்கள் பேட் மட்டையை எடுத்து தாக்க தொடங்கினர். அப்போது ஸ்முதிரஞ்சன் ராவத் என்ற நபர் நடுவர் லக்கியை கத்தியால் குத்தியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன அங்கிருந்த மற்றவர்கள், நடுவராக இருந்த லக்கியை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை உள்ளூர் மக்கள் திரண்டு பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், லக்கியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஆசை ஆசையாக பலூன் மீன் சமைத்து சாப்பிட்ட மனைவி மரணம், கணவர் கோமா! தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!

Mon Apr 3 , 2023
மலேசிய நாட்டில் பஃபர் மீனை சாப்பிட்ட மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கோமாநிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவைச் சார்ந்த எண்பத்தி நான்கு வயது பெண் ஒருவரும் அவரது கணவரும் அருகில் உள்ள கடையிலிருந்து பஃபர் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர் சாப்பிட்ட சில நேரங்களில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கே சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். தற்போது […]

You May Like