fbpx

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு மருத்துவ சீட்டு… பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர அவர்களுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்….’’ வெளியுறவு கொள்கை தொடர்பான மக்களவை குழு , இவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது… அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பது கடினம் என்றால் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

’’இந்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகள் கட்டணம் உயர்வாக இருந்ததால்தான் உக்ரைன் சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை தொட நினைக்கும் மாணவர்களுக்கு அங்கு உள்ள மருத்துவ கல்லூரிகளை கண்டறிந்து , இந்த மாணவர்கள் சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்க உதவி  செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த மாணவர்கள் ஒரு ஆண்டை இழந்து விட்டனர். மேலும் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது உக்ரைனில் போர் சூழல் உள்ளது. இதனால் மருத்துவப் படிப்பை இந்தியாவில் இருந்து சென்ற மாணவர்கள் அங்கு தொடர முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி உள்ளார்கள். கல்வியை அவர்கள் இந்தியாவில் தொடர ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் விசாரணையில் உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. எனவே அங்கு படித்த மாணவர்களுக்கு இந்திய நிறுவனங்கள் இடம் தருவது கல்வித் தரத்தை குறைத்துவிடும் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இது புற வாசல் வழியாக இந்திய கல்லூரிகளுக்குள் நுழையும் முயற்சி எனவும் கூறப்பட்டிருந்தது.

Next Post

உ.பியில், சட்டம் ஒழுங்கு நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.... யோகி ஆதித்யநாத்..!

Sun Sep 18 , 2022
உத்தரபிரதேச மாநில காவல்துறையை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழாவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டிற்கு மட்டுமின்றி, உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. 2017-ஆம் வருடத்திற்கு முன்பு வன்முறை, அராஜகம் மற்றும் போக்கிரித்தனம் பற்றி விவாதிக்க மக்கள் உத்தரபிரதேசத்தை உதாரணமாக பார்த்தனர். ஆனால், தற்போது மாநிலத்தில் சட்டம் […]

You May Like