fbpx

Electricity: 4 மணி நேரம் வரை தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு…!

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழகத்திற்கான மின் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..? மூடப்படும் அபாயம்..!! வெளியான திடீர் அறிவிப்பு..!!

Wed May 8 , 2024
உங்கள் கணக்கு பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது தான். கடந்த 3 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால் வங்கி எச்சரித்துள்ளது. மேலும், கணக்கில் நிலுவைத் தொகை இல்லையென்றால், அத்தகைய கணக்குகள் ஒரு மாதத்திற்குப் பிறகு மூடப்படும். இதுபோன்ற கணக்குகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. எந்த விதமான ஆபத்தையும் தவிர்க்க வங்கி அத்தகைய […]

You May Like