பீகார் மாநிலத்தில் கட்டுப்பட்டு வந்த சுல்தாங்கஞ்ச் பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. ககாரியா மற்றும் பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த 100 அடி நீளம் கொண்ட இந்த பாலம் இரண்டாவது முறையாக ஆற்றில் சரிந்து விழுந்தது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கனவுத் திட்டமாக 1,750 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடிந்து விழுந்தது. கங்கை ஆற்றில் பாலம் இடிந்து விழும் தருணம் அப்பகுதி மக்களால் வீடியோவில் பதிவாகியுள்ளது. பாலம் கட்டும் தன்மை குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.