இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் மழைக்காலத்தின் ஐந்து நாள்களுக்கு பெண்கள் அனைவரும் தங்களின் ஆடையை அணியாமால் இருக்கும் விநோத சடங்கை பின்பற்றி வருகின்றனர்.
பொருளாதார ரீதியாக பல முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் கலாச்சார ரீதியாக சில மாற்றங்களை நாம் சந்தித்து வருகின்றோம். இருப்பினும், இந்தியாவின் சில கிராமப்புறப் பகுதிகள் இன்னும் பழமையான மரபுகளை நடைமுறைப்படுத்துகின்றன, அவை முற்றிலும் விசித்திரமானவையாக உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம், பினி கிராமத்தில் உள்ள பெண்கள் மழை காலங்களில் கொண்டாடப்படும் திருவிழாவிற்காக 5 நாட்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருப்பது அவர்கள் வழக்கம். மேலும், அந்த 5 நாட்களில் லேசாககூட புன்னகைக்கவும் பெண்களுக்கு அனுமதி கிடையாதாம்.
இந்த நாட்களில் அவர்கள் கிராமத்திலுள்ள ஆண்கள் முன் தோன்றாமலிருக்க அவர்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது. பினி என்பது ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தின் பஞ்சார் தெஹ்சிலில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான கிராமமாகும், இதில் மொத்தம் 130 குடும்பங்கள் வசிக்கின்றன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பினி கிராமத்தில் 651 பேர் உள்ளனர், இதில் 316 பேர் ஆண்கள், 335 பேர் பெண்கள் ஆகும்.