Unemployment: நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.5% ஆக இருந்த நிலையில், 2024 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 6.4% ஆக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) தரவுகளை, தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நேற்று வெளியிட்டது. அதில், நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்களுக்கான தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் 50.4% ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடம் முன்பு இதே காலத்தில் 49.9% ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் 74.1% ஆக இருந்த நகர்ப்புற ஆண்களின் பங்களிப்பு விகிதம் அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் 75.4% ஆக அதிகரித்துள்ளது.
மக்கள்தொகை(WPR) அடிப்படையில், நகர்ப்புறங்களில் தொழிலாளர் விகிதம், 2024 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 47.2% ஆக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 46.6% ஆக இருந்தது. ஆண்களுக்கான WPR 69.8% இலிருந்து 70.9% ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பெண்களுக்கான இது ஒப்பீட்டளவில் மாறாமல் உள்ளது. நகர்ப்புறங்களில் பெண்களிடையே (15வயதுக்கு மேற்பட்டவர்கள்) வேலையின்மை விகிதமானது கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 8.6 சதவீதமாக இருந்த நிலையில் 2024ம் நிதியாண்டு அக்டோபர்-டிசம்பரில் 8.1சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல ஆண்களை பொறுத்தவரை 5.8சதவீதமாக இருந்தது.
நகர்ப்புறங்களில் முக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறிகாட்டிகளை காலாண்டு இடைவெளியில் வழங்குவதற்காக, ஏப்ரல் 2017 இல் NSO-ஆல் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு(PLFS) தொடங்கப்பட்டது. சமீபத்திய கணக்கெடுப்பு 5,742 நகர்ப்புற மாதிரி அலகுகளை உள்ளடக்கியது, 45,074 நகர்ப்புற வீடுகள் மற்றும் 1,70,487 தனிநபர்களை ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Readmore: இந்த ஒரு காயை அடிக்கடி சாப்பிட்டா போதும்.. இனி சுகருக்கு மாத்திரையே சாப்பிட வேண்டாம்..