இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சீருடை பொதுவானதாக இருக்கும் என்றும் இது வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஜெனரல் உட்பட பிரிகேடியர் மட்டத்திலும் அதற்கு மேற்பட்ட பதவிகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு படைப்பிரிவுகளில் எல்லை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, நியாயமான மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்தும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த ராணுவ கமாண்டர் மாநாட்டில் சீருடை மாற்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது. ஒருமித்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைக் கவசம், தோள்பட்டை ரேங்க் பேட்ஜ்கள், சட்டை காலர் பேட்ஜ்கள், பெல்ட்கள் மற்றும் காலணிகள் ஆகியவை பொதுவானதாக இருக்கும். லேனியார்ட்ஸ் எனப்படும் கயிறு போன்ற ஒன்றை இனிமேல் ராணுவ அதிகாரிகள் அணிய மாட்டார்கள். ”ஒரே சீருடை அனைத்து மூத்த நிலை அதிகாரிகளுக்கும் பொதுவான அடையாளத்தை உறுதி செய்யும், அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் உண்மையான நெறிமுறைகளை பிரதிபலிக்கும்” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கர்னல்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் அணியும் சீருடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ராணுவ வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
சீனியர்களுக்கு இடையே சேவை விஷயங்களில் பொதுவான அடையாளத்தையும் அணுகுமுறையையும் கொண்டு வருவது தான் இந்த நடவடிக்கையின் முதன்மையான நோக்கம் ஆகும். இது நியாயமான மற்றும் சமத்துவமான அமைப்பாக இந்திய இராணுவத்தின் தன்மையை வலுப்படுத்தும். சமீபத்தில் நிறைவு பெற்ற ராணுவத் தளபதிகள் மாநாட்டின் போது விரிவான ஆலோசனைகள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசனை செய்யப்பட்ட பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரிகேடியர், அதற்கு அதிகமான ரேங்க் கொண்ட அதிகாரிகளுக்கு ஒரே சீருடை வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்படும்.
இந்த நடவடிக்கையானது, சீனியர் லீடர்ஷிப்பில் சேவை விஷயங்களில் பொதுவான அடையாளம் மற்றும் அணுகுமுறையை மேம்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் உண்மையான நெறிமுறைகளை பிரதிபலிக்கும் அதே வேளையில், அனைத்து சீனியர் அதிகாரிகளுக்கும் பொதுவான அடையாளத்தை ஒரு நிலையான சீருடை உறுதி செய்யும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.