மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் 2025 – 26 இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தொடர்ந்து 8-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உயிர் காக்கும் மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல் புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோபால்ட் புராடெக்ட்டுகள், எல்இடி, ஜிங்க், லித்தியம் பேட்டரி உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், மின்சார வாகனங்களின் விலை குறையவுள்ளது.
Interactive Flat Panel மீதான அடிப்படை சுங்க வரி 10%இல் இருந்து 20%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொலைக்காட்சி, கணினி மற்றும் செல்போன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, பின்னலாடை துணி நூலுக்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், துணிகள் 10% அல்லது கிலோவுக்கு ரூ.115 அதிகரிக்க வாய்ப்புள்ளது.