மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம், 2024 க்கு அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான உத்தர்பூர்வா மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம், 2024 (உன்னதி – 2024) அறிவிக்கை செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு, மொத்தம் ரூ.10,037 கோடி மதிப்பீட்டில் 8 ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கோ அல்லது ஏற்கனவே உள்ள அலகுகளை கணிசமாக விரிவாக்கம் செய்வதற்கோ சலுகைகள் வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு
விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2024 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகமாகும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் காரணமாக அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவு ஆண்டுக்கு 12,868.72 கோடி ரூபாயாக இருக்கும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.