fbpx

இந்து பெண்ணை அவமதித்தால் கைகளை வெட்டுவோம்…! மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு…!

இந்து பெண்களை அவமதிப்பவர்களின் கைகளை வெட்டுவோம் என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் பாய் வீரேந்திரா. இவர், இந்து-இஸ்லாமியர் பிரிவினையை பயன்படுத்தி பாஜக போலி அரசியல் செய்வதாகவும், ஆனால் பாஜக தலைவர்கள் சிலர் தங்கள் மகள்களை, இஸ்லாமிய சமூகத்தினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும் கூறினார்.

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் இதற்கு உதாரணம் என்றும், தங்கள் மகள்களை இஸ்லாமியர்களுக்கு திருமணம் செய்து வைப்பதை விட்டுவிட்டு, அவர்களை பாஜக தலைவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே இந்து மதத்தை சேர்ந்த மகள்களை அவமதிப்பவர்களின் கைகளை வெட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

உஷார்..!! புதுமண தம்பதிகளை கறிவிருந்துக்கு அழைத்த உறவினர்..!! 35 சவரன் நகைகளை சுருட்டிக் கொண்டு ஓட்டம்..!!

Mon Mar 20 , 2023
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த நரேந்திரன் (26) என்பவர் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அப்போது, நரேந்திரனுக்கு உறவினர்கள் சிலர் விருந்து வைத்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கே.கே.நகரில் உள்ள தனது சித்தி மகள் வனிதா வீட்டிற்கு தனது மனைவியுடன் கறி விருந்துக்கு சென்றுள்ளார் நரேந்திரன். மறுநாள் வீட்டிற்கு வந்த நரேந்திரன், தனது […]

You May Like