fbpx

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கார் விபத்தில் சிக்கியது…!

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கார் விபத்தில் சிக்கியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பனிஹால் பகுதியில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கார் சனிக்கிழமை மாலை சிறிய விபத்தில் சிக்கியதாக ஏடிஜி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். கார் விபத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், இது ஒரு சிறிய விபத்து தான் என்று ஏடிஜி கூறியுள்ளார்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று ரம்பனில் அமைச்சரின் கார் மீது லாரி மோதியது. சாலை விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாகவே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் பின்னணியில் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Vignesh

Next Post

கவனம்...! வரும் 11-ம்‌ தேதி சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌...! இவர்களுக்கு மட்டும் தான்...!

Sun Apr 9 , 2023
தருமபுரி மாவட்டத்தில்‌ வருகின்ற 11.04.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது. இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ வருகின்ற 11.04.2023 அன்று காலை 11.00 மணி முதல்‌ மதியம்‌ 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிடத்தில்‌ நடைபெறவுள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளிகள்‌ […]

You May Like