உலக புற்றுநோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்று நோயை கண்டறிவதில், நவீன ஏஐ தொழில் நுட்பத்தின் பங்கு குறித்தும், இந்த ஆண்டு புற்று நோய் தினத்தின் கருப்பொருள் குறித்தும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் கண்ணன் கூறிய கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
2025-ம் ஆண்டுக்கான புற்றுநோய் கருப்பொருள் : யுனைட்டட் பை யுனிக்’ புற்றுநோயில் ஒவ்வொரு நோயறிதலும், ஒவ்வொருவரின் தனித்துவமான அனுபவங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவரின் புற்றுநோய் பயணமும் தனித்தன்மை நிறைந்தது.
புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களின் அனுபவங்களை மற்ற நோயாளிகள் அறிந்து கொண்டு அதற்கேற்ப மனதை திடப்படுத்திக் கொள்ளவும், ஆரம்ப கால நோயறிதலை பற்றிய விழிப்புணர்வை மக்கள் பெறவும் வேண்டும் என இந்தாண்டு புற்றுநோய் தின கருப்பொருளின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஒற்றுமையாகச் செயல்பட்டு புற்றுநோயின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், ஒவ்வொரு தனிநபரின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புற்றுநோய் சிகிச்சைகளை வடிவமைப்பதன் முக்கியத்துவமும் இந்தாண்டு புற்றுநோய் கருப்பொருளில் முன்னிலை வகிக்கிறது.
புற்று நோயை கண்டறிய ஏஐ பங்கு : புற்று நோயை கண்டறிவதில் தற்போது ஏஐ முக்கிய பங்கு வகிக்கிறது. ரிப்போர்ட் விரைவாகவும், துல்லியமாகவும் கிடைக்கிறது. வரும் காலத்தில், ஏஐ பயன்பாடு இன்றியமையாததாக இருக்கும்.
அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும் :
புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆரம்ப கால அறிகுறிகளான எடை இழப்பு, உடல் சோர்வு, உடலில் உருவாகும் கட்டிகள் போன்ற சில குறிப்பிடத்தகுந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை கவனத்தில் கொண்டு புற்றுநோயின் துவக்கத்திலேயே அதற்குரிய சிகிச்சைகளை பெறுவது, புற்றுநோயின் தீவிரம் மற்றும் அதனுடைய விளைவுகளைக் குறைக்கும். புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதில் ஸ்கிரீனிங் சோதனைகளான மேமோகிராபி, பேப் ஸ்மியர்ஸ் மற்றும் HPV சோதனைகள் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Read more : உலக புற்றுநோய் தினம் 2025: நீங்கள் புறக்கணிக்கவே கூடாத கேன்சர் அறிகுறிகள் இவை தான்..