fbpx

பாஜக கூட்டணியில் இருந்து விலகும் ஐக்கிய ஜனதா தளம்..? வெளியான தகவலால் அரசியலில் பரபரப்பு..!

பாஜக கூட்டணியில் இருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக உடனான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாட்னாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவி வகிக்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகும் ஐக்கிய ஜனதா தளம்..? வெளியான தகவலால் அரசியலில் பரபரப்பு..!

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும், பாஜகவுடன் கருத்து வேறுபாடு காரணமாக, சமீபகாலமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்து வந்தார். பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்திருந்தது. இருப்பினும், கூட்டணியில் உள்ளதால் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். பாஸ்வான் கட்சி உடைந்தது போல ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்த நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Chella

Next Post

’பொங்கலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை வாங்க தமிழக அரசு முயற்சி’..! - அண்ணாமலை

Mon Aug 8 , 2022
பொங்கல் பண்டிகைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை வாங்க முயற்சி நடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, கைத்தறி தின விழாவையொட்டி, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”சுதந்திர தினத்தைக் கொண்டாடும் […]

You May Like