கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பருத்திவீரன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருப்பார். மேலும், இப்படத்தில் சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை இன்றளவும் நங்கூரமாய் பிடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘பருத்திவீரன்’. இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தின் மூலம் மதுரையின் மண்வாசத்தையும், வீரத்தையும், திமிரையும், கோபத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருப்பார் அமீர். இந்த படத்தில் நடித்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாகவே செதுக்கியிருப்பார். மதுரை பேச்சு, நடை, தோரணை என பிசிறே இல்லாமல் ஒட்டுமொத்த காட்சியையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கியிருப்பார் இயக்குனர். திரைப்பட விழா ஒன்றில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “பருத்திவீரன் படத்தை பார்த்துவிட்டு உண்மையாவே இது கார்த்தியின் முதல் படமா என்று யோசித்தேன்” என்று கூறியிருப்பார்.
அந்த அளவுக்கு இந்த படத்தில் கார்த்தி மிரட்டியிருப்பார். இன்றும் பிரியாமணியை தமிழ் ரசிகர்கள் ‘முத்தழகு’ என்று தான் அடையாளம் கொள்வார்கள். அந்த அளவுக்கு மனதில் பதிய வைத்தது அந்த கதாபாத்திரம். இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்றும் பார்த்து வியக்கக்கூடிய படமாக பருத்திவீரன் இருக்கிறது என்றால், நிச்சயம் மறுக்க முடியாது.
இந்த படத்தில் ‘அறியாத வயசு புரியாத மனசு’ பாடலில் வரும் சின்ன வயசு முத்தழகு கதாபாத்திரத்தில் ஒரு சிறுமி நடித்திருப்பார். அந்த சிறுவயது முத்தழகுவின் சமீபத்தில் ஃபோட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பருத்திவீரன் முத்தழகா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! கரும்பு கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!! ஒரு டன் எவ்வளவு தெரியுமா..?