fbpx

1 வருடத்திற்கு அன்லிமிடெட் 5G டேட்டா.. அதுவும் இவ்வளவு மலிவான விலையில்.. ஜியோவின் புதிய திட்டம்..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்கும் “அல்டிமேட் 5ஜி அப்கிரேட் வவுச்சர் (Ultimate 5G upgrade voucher) ” என்ற புதிய திட்டத்தை ரூ.601 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ள பயனர்களை இலக்காகக் கொண்டது, இதில் தினசரி 1.5ஜிபி டேட்டாவும் அடங்கும். இந்த வவுச்சர் மூலம், 5G திட்டம் அல்லாத பயனர்களும் மலிவு விலையில் வரம்பற்ற 5G இணைப்பை பெற முடியும்.

கடந்த ஜூலை 3-ம் தேதி ரீசார்ஜ் திட்டங்களின் கட்டண உயர்வை அறிவித்ததை தொடர்ந்து வரம்பற்ற 5G அணுகலுக்கான தகுதி வரம்பை உயர்த்தியது. முன்னதாக, பயனர்கள் ஜியோவின் வெல்கம் ஆஃபரை ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட எந்த திட்டத்திலும் செயல்படுத்த முடியும். ஆனால் கட்டண உயர்வுக்கு பின்னர் ரூ.349 திட்டம் போன்ற 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட தினசரி டேட்டா கொண்ட திட்டங்களுக்கு வரம்பற்ற 5ஜி நன்மைகள் கிடைக்கின்றன..

ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்படுத்தல் திட்டங்கள், 5G அல்லாத திட்டங்களில் பயனர்கள் வரம்பற்ற 5G ஐ பெற அனுமதிக்கின்றன. இவற்றில் ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.151 விலையுள்ள பூஸ்டர் பேக்குகள் அடங்கும். ஒவ்வொரு திட்டமும் வரம்பற்ற 5ஜி அணுகலுடன் கூடுதல் 4ஜி டேட்டாவை வழங்குகிறது. உதாரணமாக, ரூ.51 திட்டத்தில் 4ஜிபி 4ஜி டேட்டாவும், ரூ.101 திட்டத்தில் 6ஜிபியும், ரூ.151 திட்டத்தில் 9ஜிபியும் வழங்கப்படுகிறது.

ஜியோ தனது MyJio செயலியில் ரூ.601 வவுச்சரை “தடையற்ற இணைப்புக்கான பரிசு” என்று அறிவித்துள்ளது.. பயனர்கள் ஜியோ செயலி மூலம் இந்த வவுச்சரை வாங்கலாம். இருப்பினும், இந்த வவுச்சர் ரூ. 299 அல்லது அதற்கும் அதிகமான திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மேலும் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் டேட்டாவை மட்டுமே வழங்கும் விருப்பங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி புதிய ரூ.11 என்ற மலிவான திட்டம், ஒரு மணிநேரத்திற்கு 10ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.49, ரூ.175, ரூ.219, ரூ.289 மற்றும் ரூ.359 விலையில் பல டேட்டா திட்டங்கள் கிடைக்கின்றன. எனினும் இந்த அனைத்து திட்டங்களிலும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை.

இந்த வரம்பற்ற மேம்படுத்தல் திட்டங்கள் மற்றும் முழுமையான டேட்டா விருப்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஜியோ 5G அணுகலை மிகவும் மலிவு விலையில் மாற்றுகிறது., அதே நேரத்தில் பயனர்கள் குறிப்பிடத்தக்க செலவு அதிகரிப்பு இல்லாமல் தங்கள் இணைப்பை மேம்படுத்தும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.

Read More: லண்டனில் ரகசியமாக அண்ணாமலையை சந்தித்த விஜய்..? அடுத்த நிமிடமே பாஜகவினருக்கு பறந்த உத்தரவு..!!

English Summary

Unlimited 5G data for 1 year.. that too at such a cheap price.. Jio’s new plan..

Kathir

Next Post

கர்ப்பிணிளுக்கு சோயா பால் ஆபத்தானதா?. உண்மை என்ன?

Tue Nov 19 , 2024
Is soy milk dangerous for pregnant women? What is the truth?

You May Like