fbpx

அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் திட்டங்கள்..

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பகுதியில் வசிக்கும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அன்லிமிடெட் , வேகமான 5ஜி டேட்டாவை இலவசமாக அனுபவிக்க முடியும்.

இந்தச் சலுகை ரூ.239 மற்றும் அதற்கு மேல் செயலில் உள்ள டேட்டா திட்டத்தைக் கொண்ட ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் இணைப்புகளைக் கொண்ட அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். அன்லிமிடெட் 5G டேட்டா சலுகை மட்டுமின்றி, ஏர்டெல் சேவை அனுபவத்தை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி ஹாட்ஸ்டாரின் இலவச OTT சந்தா போன்ற கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. வரம்பற்ற 5ஜி டேட்டா, அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.399 திட்டம்: ரூ.399 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தாவையும் உள்ளடக்கியது. இதில் அன்லிமிடெட் கால் வசதியும் கிடைக்கும்.. மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2.5 ஜிபி தினசரி டேட்டா நன்மைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.499 திட்டம்: அதிக டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 திட்டம் சரியான தேர்வாகும். 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா நன்மைகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு ஆகியவை அடங்கும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற கூடுதல் பலன்களையும் பெறலாம்..

ஏர்டெல் ரூ.839 திட்டம்: நீண்ட கால திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு, ரூ.839 திட்டமானது வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா நன்மைகளுடன் கிடைகிறது.. இத்திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தா மற்றும் பிற நன்மைகளையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள்.

ஏர்டெல் ரூ.3359 திட்டம்: வருடாந்திர திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.3359 திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.. இந்த வருடாந்திர திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா ரோல்ஓவர், எஸ்எம்எஸ் மற்றும் 356 நாட்களுக்கு கால் வசதிகள் உள்ளன. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான 1 ஆண்டு சந்தாவை அனுபவிக்க முடியும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் ஏர்டெல் 5ஜி பிளஸ் இயக்கப்பட்ட நகரங்களில் வசிக்கும் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகின்றன. ஏர்டெல் 5ஜி தற்போது 500க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கி வருகிறது, எதிர்காலத்தில் மேலும் பல நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இந்த மாவட்டத்திற்கு ஏப்.10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Wed Mar 29 , 2023
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 29ஆம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையை பணி நாளாக கொண்ட நிறுவனங்களுக்கு ஏப்ரல் 30ஆம் […]

You May Like