fbpx

உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா கவலையே வேண்டாம்….! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு குஷியில் இளைஞர்கள்….!

தற்போது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 90ஸ் கிட்ஸ் என்று சொல்லப்படும் 90களில் பிறந்த நபர்கள் திருமணம் ஆகாமல், மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள் 2k கிட்ஸ் என்று சொல்லப்படும் 2000 களில் பிறந்தவர்களுக்கு கூட திருமணம் ஆகி விடுகிறது. ஆனால், இந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆவது அவ்வளவு எளிதல்ல.

அவர்கள் ஒருபுறம் நமக்கு பெண் கிடைக்கவில்லையே, திருமணம் ஆகவில்லையே என்று கவலையில் இருந்து வரும் நிலையில், அவர்களை குஷிப்படுத்தும் விதமாக, தற்போது ஹரியானா மாநில அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

அதாவது, திருமணமாகாத இளங்கலை பட்டதாரிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகையாக ரூபாய் 2750 கிடைக்கும் என்று, அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இது பற்றி முழுமையாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர் பணியாற்றி ஓய்வு பெறுகிறார் என்றால், அந்த நபருக்கு ஓய்வூதியம் தேவை. ஆனால், அந்த நபர் திருமணமானவரா? இல்லையா? என்பது முக்கியமானது இல்லை. திருமணம் ஆனவர்களுக்கு அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. அவர்களிடமிருந்து திருமணமானவர்கள் முதுமை காலத்திலும் உதவியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், திருமணமாகாதவர்களுக்கு அப்படியல்ல.

திருமணமே நடக்காதவர்களை பொறுத்தவரையில், ஓய்வுக்கு பின்னான காலகட்டமும் மிகவும் கடுமையானதாக இருக்கும். திருமணமாகாத ஆண்களும், பெண்களும் ஓய்வூதியம் பெரும் ஒரு திட்டத்தை பற்றி தற்போது இந்த செய்தியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

அதாவது, இந்த சிறப்பு திட்டத்தின் பெயர் திருமணம் ஆகாத ஓய்வூதிய திட்டம் என்று கூறப்படுகிறது. இது ஹரியானா மாநில அரசால் இயக்கப்படுகின்றது. இந்த திட்டம் சென்ற ஜூலை மாதம் அந்த மாநில முதலமைச்சரால், அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2750 ஓய்வூதியமாக வழங்கப்படும். 45 முதல் 60 வயது வரையில் இருக்கின்ற திருமணமாகாத நபர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். ஆனாலும், இந்த திட்டத்தை பெற சில நிபந்தனைகள் இருக்கின்றன.

அதாவது, திருமணம் ஆகாத பயனாளியின் ஒரு ஆண்டின் வருமானம் 1,80000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல லிவ் இன் முறையில் வாழ்க்கை நடத்தி வருபவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற முடியாது. ஹரியானா மாநிலத்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும் வசதி இணையதளம் மற்றும் ஆஃப்லைன் உள்ளிட்ட இரண்டிலும் கிடைக்கும். ஆர்வமான நபர்கள், அந்தோதயா சாரல் போர்ட்டலுக்கு சென்று, இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு, இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மனைவி, கணவர் உள்ளிட்டோரின் இறப்புச் சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்றால், வாக்காளர் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

Next Post

இந்தியா To பாரத்..!! எந்த ஆவணங்களும் செல்லாது..!! மீண்டும் வரிசையில் நிக்கணும்..!! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..?

Wed Sep 6 , 2023
இந்தியாவின் பெயரை பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம். மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத் தலைவர் என குடியரசுத் தலைவர் மாளிகை […]

You May Like