fbpx

வரலாறு காணாத உயர்வு..!! பருவமழையில் மிகப்பெரிய மாற்றம்..!! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!!

கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சராசரியாக 21 டிகிரி செல்ஷீயஸ் அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் மைனே பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்ற நிறுவனம், உலக அளவில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, வரலாற்றில் இல்லாத வகையில் சராசரியாக 21.1 டிகிரி செல்ஷியஸ் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்திய பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 29 – 31 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகம்.

தெற்கு அரேபிக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலிலும் 30 டிகிரி செல்ஷியஸ் வரை மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் பருவமழை தாமதமாகவோ அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை அதிகளவில் பெய்யும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் பவளப்பாறைகள், மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு..!! அப்படினா ஊரடங்கு கட்டாயம் இருக்கா..?

Wed Apr 19 , 2023
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், நேற்று குறைந்தது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இதற்கிடையே, மே மாதம் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் 10 நாட்களில் இந்த உச்சத்தை தொட வாய்ப்பு […]

You May Like