fbpx

பயன்படுத்தாத மொபைல் எண்கள் 90 நாட்களில் புதிய பயனருக்கு ஒதுக்கப்படாது!… TRAI விளக்கம்!

சந்தாதாரரின் கோரிக்கையின் பேரில் பயன்படுத்தாத அல்லது துண்டிக்கப்பட்ட மொபைல் எண்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு புதிய சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்படாது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மொபைல் எண் பயன்படுத்தப்படாததால் துண்டிக்கப்பட்ட அல்லது செயலிழக்கச் செய்யப்பட்ட பிறகு, தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாக தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஸ்வரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் SVN பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, முந்தைய தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட WhatsApp கணக்கை நீக்குவதன் மூலமும், உள்ளூர் சாதன நினைவகம், கிளவுட் அல்லது சேமித்து வைத்திருக்கும் தரவை அழிப்பதன் மூலமும் ஒரு சந்தாதாரர் WhatsApp தரவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம் என்று குறிப்பிட்டது.

மேலும், சந்தாதாரரின் கோரிக்கையின் பேரில் பயன்படுத்தாததற்காக அல்லது துண்டிக்கப்பட்ட மொபைல் போன் எண்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு புதிய சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்படாது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதேபோல், வாட்ஸ்அப் உதவி மையத்தில் உள்ள தகவல்களின்படி, “மறுசுழற்சி செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் உள்ள குழப்பத்தை அகற்ற, கணக்கு செயலிழப்பைக் கண்காணிக்கிறார்கள், மேலும் ஒரு கணக்கு செயலிழந்த 45 நாட்களுக்கு பிறகு வேறொரு மொபைல் சாதனத்தில், பழைய கணக்குத் தரவு அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், தனியுரிமை பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய சந்தாதாரர் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Kokila

Next Post

விநாடிக்கு 2,600 கனஅடி நீர்..!! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அதிரடி உத்தரவு..!!

Sat Nov 4 , 2023
காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று நவம்பர் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. காவிரி ஒழுங்காற்று குழு அண்மையில் கூடி தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் வினாடிக்கு 2,600 கன அடி நீரை நவம்பர் 23ஆம் தேதி வரை […]

You May Like