உத்தரபிரேத மாநிலத்தில் தவறாக உச்சரித்ததாக கூறி பள்ளி ஆசிரியர் இரும்புக் கம்பியைக் கொண்டு மாணவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்புபள்ளி மாணவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிகித் டோஹ்ரே என்ற அந்த பள்ளி மாணவர் சமூக அறிவியல் பாடத்தில் ஒன்றை வாசித்துக் காட்டும் போது தவறான உச்சரிப்பை பயன்படுத்தியுள்ளளார். இதனால் ஆசிரியை அஸ்வினி சிங்க் ஆத்திரமடைந்து தடி மற்றும்கம்பியால் மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மயங்கி விழும் வரை தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதனிடையே வாட்சப்பில் வீடியோ ஒன்று வைரலாகியது. அதில் அந்த மாணவரைத் தாக்குவது பகிரப்பட்டு இருந்தது. சாதி பெயரை பயன்படுத்தி இழிவாக பேசியது தெரியவந்ததது. அந்த ஆசிரியர் உயர் சாதி என்பதால் தாழ்த்தப்பட்ட மாணவரை படிப்பை காரணம் காட்டி கொடுமைப்படுத்தியுள்ளார். சாதிய அவதூறு வார்த்தைகளால் திட்டியுள்ளார். தொடர்ந்து மாணவனின் தந்தையையும் இதே போல அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது 10,000 ரூபாய் சிகிச்சைக்காக கொடுத்துள்ளார். கூடுதலாக பணம் தேவைப்பட்டபோது ஆசிரியர் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டடார். நேற்று மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இதைக் கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது.
போலீசாரின் இரண்டு வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.