fbpx

கவனம் மக்களே…! இந்த தவறை செய்தால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை பிளஸ் அபராதம் விதிக்கப்படும்…!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுற்றுச்சூழல்‌, வனங்கள்‌ மற்றும்‌ காலநிலை மாற்றம்‌ அமைச்சகம்‌, இந்திய அரசின்‌ மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016ஐ அறிவித்தது, இந்தவிதிகள்‌ அக்டோபர்‌ 1, 2016 முதல்‌ நடைமுறைபடுத்தப்பட்டது.

மின்‌-கழிவு (மேலாண்மை) விதிகள்‌, 2016-ன்கீழ்‌, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌- கழிவு புதுப்பிப்பாளர்களால்‌ மட்டுமே மின்கழிவுகளைச்‌ சேகரித்து செயலாக்க முடியும்‌ மேலும்‌ மத்திய மாசுகட்டுபாடு வாரியத்திடம்‌ நீட்டிக்கபட்ட உற்பத்தியாளர்‌ பொறுப்பு சான்றிதழ்‌ பெற்ற உற்பத்தியாளர்கள்‌ மின்‌-கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்‌.

மின்னனுகழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016, விதி 24-ன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்‌ கைவிடப்பட்ட மின்‌-கழிவு பொருட்களைச்‌ சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்கள்‌ அல்லது மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்‌.

முறைசாரா வர்த்தகம்‌, அறிவியல்‌ பூர்வமற்ற செயலாக்கம்‌ மற்றும்‌ மின்கழிவுகளை எரித்தல்‌ போன்ற சம்பவங்கள்‌ பல்வேறு சந்தர்ப்பங்களில்‌ பொதுமக்களின்‌ குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின்‌ மூலம்‌ மின்‌-கழிவுகளை அறிவியல்‌ பூர்வமற்ற முறையில்‌ பதப்படுத்துதல்‌ மற்றும்‌ எரித்தல்‌ ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும்‌, சுற்றுச்சூழலுக்கும்‌ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதிகள்‌ மீறப்பட்டால்‌ மின்‌ பொருள்‌ உற்பத்தியாளர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌, இறக்குமதியாளர்கள்‌, மின்‌ கழிவு இடமாற்றம்‌ செய்வோர்‌, பிரித்தெடுபோர்‌ மற்றும்‌ மறுசுழற்சி செய்வோர்‌ ஆகியோருக்கு சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு சட்டம்‌,1986-ன்‌ கீழ்‌ தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌.

எனவே இவ்வகையான செயல்களில்‌ ஈடுபடும்‌ மின்கழிவு கையாளுபவர்கள்‌ மீது சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு சட்டம்‌, 1986 இன்‌ பிரிவு 5-ன்‌ படி அந்நிறுவனத்தை மூடிடவும்‌ அல்லது அந்நிறுவனத்தில்‌ மின்சாரம்‌, நீர்‌ அல்லது வேறு எதேனும்‌ சேவையை நிறுத்தவும்‌ அதிகாரம்‌ வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும்‌ அச்சட்டத்தின்‌ பிரிவு 15-ன்‌ கீழ்‌ ஐந்து ஆண்டுகள்‌ வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம்‌ ரூபாய்‌ வரை அபராதம்‌ அல்லது இவை இரண்டும்‌ விதிக்கப்படும்‌.

Vignesh

Next Post

#Rain: இன்று இந்த 14 மாவட்டத்தில் கனமழை...! மக்கள் எல்லாம் எச்சரிக்கையா இருங்க...!

Thu Nov 3 , 2022
தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், […]

You May Like