fbpx

உபி வாரியர்ஸ் பந்துகளை தெறிக்கவிட்ட கேப்டன்..!! அபார வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ்..!!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், உபி
வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் உபி அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. டெல்லி அணியின் கேப்டன் மெக் லென்னிங் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில், 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 70 ரன்கள் குவித்து ராஜேஸ்வரி கெய்க்வாட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் அணிக்கு வலு சேர்த்த ஜெமிமா ரோட்ரிகஸ் 22 பந்துகளில் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 20 பந்துகளில் 44 ரன்களும் குவித்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து, 212 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய உபி அணியானது, துவக்க
ஆட்டக்காரர்ககளை பவர்பிளே ஓவர்களுக்குள் இழந்தது. அதன் பின் களமிறங்கிய தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் உபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Chella

Next Post

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை..!! ரூ.63,000 வரை சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!

Wed Mar 8 , 2023
தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் காலியாக உள்ள 58 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் வயதுவரம்பு 31.03.2023 அன்று 18 -27க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு வழங்கப்படும். […]

You May Like