fbpx

நாடு முழுவதும் 10.1 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு…! 2023-ம் ஆண்டிற்கான புள்ளி விவரம்…!

2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய நீரிழிவு ஆய்வின்படி, நீரிழிவு நோயின் பாதிப்பு 10.1 கோடி ஆகும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பொதுவான புற்றுநோய்கள் போன்ற பொதுவான தொற்றா நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்கான மக்கள்தொகை அடிப்படையிலான முன்முயற்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழும், விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பின் ஒரு பகுதியாகவும் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியின் கீழ், 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பொதுவான தொற்றா நோய்களுக்கான பரிசோதனைக்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் கீழ் இந்த பொதுவான என்.சி.டி.களை பரிசோதிப்பது சேவை வழங்கலின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இது நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் ஆபத்து காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

விபரங்கள்: https://www.thelancet.com/journals/landia/article/PIIS2213-8587(23)00119-5/fulltext என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

FAME II திட்டத்தின் கீழ் மானியத்துடன் மின்சார வாகனம்..‌.! மொத்த விவரம் இதோ...

Sun Aug 6 , 2023
2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான அணுகல் மற்றும் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, FAME இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 ஏப்ரல் 01 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மொத்த வரவு செலவுத் திட்ட ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. FAME II திட்டத்தின் கீழ் 7,090 மின்சார பேருந்துகள், 5 லட்சம் மின்-மூன்று சக்கர வாகனங்கள், 55,000 மின்சார – நான்கு சக்கர […]

You May Like