fbpx

UPSC 2024 தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு முடிவுகள் வெளியீடு.!! டவுன்லோட் செய்வது எப்படி .?

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2024 ஆம் வருடத்திற்கான தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) 2024 தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி (என்டிஏ & என்ஏ) எழுத்து தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முடிவை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 2 2025 இல் தொடங்கும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்தியன் நேவல் அகாடமி படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தியது. இந்தத் தகுதி பட்டியலின் இடம் பெற்றுள்ள போல் எண்களை கொண்ட தேர்வர்களின் பட்டியல் தற்காலிகமானது.

எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு இணையதளத்தில் https://joinindianarmy.nic.in இல் தங்களை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு சர்வீஸ் செலக்சன் போர்டு தேர்வு வையுங்கள் மற்றும் நேர்காணல் தேதிகளை அறிவிக்கும். இந்த அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக வெற்றி பெற்ற தேர்வாளர்களுக்கு அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

வெற்றி பெற்ற தேர்வர்கள் ஏற்கனவே இந்த இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் மீண்டும் பதிவு செய்ய தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்பவர்களுக்கு இணையதளத்தில் லாகின் பிரச்சனை இருந்தால் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியில் http://dirrecruiting6-mod@nic.in.தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் வயது மற்றும் கல்வித் தகுதி தொடர்பான அசல் சான்றிதழ்களை சேவைத் தேர்வு வாரியத்தின் நேர்காணலின் போது சம்பந்தப்பட்ட சேவைத் தேர்வு வாரியத்திடம் (SSB) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வர்கள் எந்த காரணம் கொண்டும் தங்கள் அசல் சான்றிதழ்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அனுப்ப கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து( சர்வீஸ் செலக்சன் போர்ட் நேர்காணல் முடிந்த பிறகு) 15 நாட்களுக்குள் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல்கள் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மதிப்பெண் சான்றிதழ் 30 நாட்கள் வரை இணையதளத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC NDA 1 முடிவு 2024 டவுன்லோட் செய்வதற்கான வழிமுறைகள்:

UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindianarmy.nic.in/Authentication.aspx க்குச் செல்லவும்.

முகப்புப்பக்கத்தில் UPSC NDA தேர்வு முடிவு பகுதிக்கு செல்லவும்.

எழுத்து தேர்வு முடிவுகள் – தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2024′ என்ற தலைப்பில் இணைப்பைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும்.

திரையில் தோன்றும் PDF முடிவைப் பார்க்கவும்.

pdf ரிசல்ட்டில் உங்களது பெயரை கண்டறியவும்.

கொடுக்கப்பட்ட pdf லிஸ்டில் இருந்து உங்களது தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

Read More: Savukku Shankar | “சவுக்கு சங்கருக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி..” மேலும் 2 வழக்குகளில் கைது.!! வெளியான புதிய தகவல்.!!

Next Post

பழிதீர்க்க காத்திருக்கும் குஜராத்!… 'சிங்க நடையை' தொடரும் முனைப்பில் சிஎஸ்கே!… அகமதாபாத்தில் இன்று அதிரடி!

Fri May 10 , 2024
CSK VS Gujarat: ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த மேட்ச் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில்,ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மீண்டும் […]

You May Like