fbpx

தமிழகத்தில் 5 நகரங்களில் இன்று தொடங்கியது…..! யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வு…..!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருடம் தோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப்பணி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ எஃப் எஸ், குரூப் எ, குரூப்-b, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருக்கின்ற காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுகள் முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்று மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

இத்தகைய நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான இந்திய குடிமைப்பணி முதல் நிலை தேர்வு சென்ற வருடம் ஜூன் மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் முதன்மை தேர்வுகள் நடைபெற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வெளியாகினர். இந்த நிலையில், கொடுமைப் பணிகளுக்கான 2023 ஆம் வருடத்திற்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலை தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

2 தாள்களும் காலை மதியம் என்று இரு வேலைகளிலும் நடைபெறுகிறது பொது படிப்புகள் எனப்படும் ஜி.எஸ்-1 தாளுக்கான தேர்வு காலையிலும் சி சாட் தேர்வு மதியமும் நடைபெறுகின்றது. காலை 9.30 மணி அளவில் தொடங்கிய இந்த தேர்வு மதியம் 11:30 மணி அளவில் முடிவடைகிறது.

சி சேட் தேர்வு மதியம் 2:30 மணி அளவில் தொடங்கி மாலை 4.30 மணி அளவில் முடிவடைகிறது இதற்கு தேர்வர்கள் மதியம் 2.20 மணியளவில் முன்னதாகவே தேர்வு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும் அதற்குப் பின்னர் யாரும் வந்து சென்று தேர்வு எழுத இயலாது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் உள்ளிட்ட 5 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது

Next Post

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்வி கங்காப்பூர்வாலா பதவியேற்றார்….!

Sun May 28 , 2023
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மூத்த நீதிபதியான டி. ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு டி ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த […]

You May Like